சென்னை: காசிமேட்டில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றுவருகிறது. இதனால் காசிமேட்டில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பைபர் படகுகள் மூலமாக 60 நாட்டிகல் மைல் வரை கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் பைபர் படகுகள் இன்று காலை காசிமேட்டிற்கு வந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவு மீன்கள் வரத்து இல்லாததால் போதிய வருமானம் இன்றி விரக்தியடைந்தனர். மேலும் காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமான சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். மீன்வரத்து குறைவாக இருந்ததால் பொதுமக்கள் எதிர்பார்த்த மீன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும் மீன்களின் விலை என கனிசமான விலையிலேயே விலைபோனது.
- வஞ்சரம் - 1000
- பாறை-500
- கவலை-200
- இறால் -400
- நண்டு -400
- கடவாய் -500
சங்கரா-300 என கனிசமான விலையிலேயே விலைபோனது.
இதையும் படிங்க:கரைக்குத் திரும்பாத படகுகள் - குறைந்த அளவிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள் - காசிமேடு மீன் மார்க்கெட் நிலவரம் இதுதான்!