சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மெரினாவில் கருணாநிதி நினைவிடம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.
அரசாணை வெளியீடு
கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அனுமதியளித்துள்ளது.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் இரண்டாவது நாளாக ஸ்டாலின்!