ETV Bharat / state

கார்த்தி சிதம்பரம் மீதான வரிஏய்ப்பு வழக்குக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்!

சென்னை : கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

karthick-chidambaram-tax-evasion-case
author img

By

Published : Aug 19, 2019, 10:29 PM IST

2015-16ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, காங்கிரஸ் எம்ப. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, கடந்த ஜூலை மாதம் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார். இதன்படி, இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வருமான வரி வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. தற்போது மாற்றப்பட்ட வழக்கால் எந்த பாதிப்பும் மனுதாரருக்கு ஏற்படாது. வழக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை அறிய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Intro:nullBody:வரிஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கை எம்.பி,எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரனைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, கடந்த ஜூலை மாதம், எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார்.

இதன்படி, வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மாற்றியதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வருமான வரி வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. தற்போது மாற்றப்பட்ட வழக்கால் எந்த பாதிப்பும் மனுதாரருக்கு ஏற்படாது. வழக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை அறிய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.