ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயிலில் காட்டாற்று வெள்ளம்; 100க்கும் மேற்பட்டவர்களை மீட்ட மீட்புக்குழு!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கிய 100க்கும் மேற்பட்டவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு உள்ளனர்.

மீட்புக்குழுவினரின் நடவடிக்கை
மீட்புக்குழுவினரின் நடவடிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அருவி ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், குளிப்பதற்கும் வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தீபாவளி மறுநாள் விடுமுறை தினம் என்பதால், ராக்காச்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்த நிலையில், மாலை நேரத்தில் வனப்பகுதியில் கனமழை பெய்துள்ளது.

ராக்காச்சி அம்மன் கோயில் வெள்ளப்பெருக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக, ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி உள்ளது. இதனால் கோயிலில் இருந்தவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். பின்னர், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'அந்த கடப்பாரையை குடுங்க சார்'.. சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றிய போக்குவரத்து காவலர்கள்..!

ஆனால், மம்சாபுரம் - ராக்காச்சி அம்மன் கோயில் சாலையில், அத்தி துண்டு ஓடையில் உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் நிலையில், தற்காலிக தரைப்பாலத்தை கடந்த வாரம் பெய்த கன மழையில் காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றதால், வாகனம் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர், வெள்ளத்தில் சிக்கி இருந்த 150க்கும் மேற்பட்டோரை பேரை கயிறு கட்டி மீட்டனர்.

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.