சென்னை: டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த கார்த்திக் சிதம்பரம் எம்பி-க்கு காங்கிரஸ் தொண்டர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், “ரெய்டு எனக்கு புதிதல்ல. ஆறு முறை ரெய்டு செய்து எதைக் கண்டு பிடித்தார்கள்..?. இந்தியாவில் இதுவரை யாரையும் ஆறு முறை ரெய்டு செய்ததில்லை.
என் மீது போடப்பட்ட வழக்கு உண்மையான குற்றசாட்டு இல்லை, புலன் விசாரணை என்ற பெயரில் மன உலைச்சல் தரும் முயற்சி தான். 27 மணி நேரம் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். சிபிஐ என்ன கேள்வி கேட்டனர் என்பதை வெளியிடாமல் இருப்பது ஏன்..?விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.
என் தந்தை ப.சிதம்பரம் வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் என்னை தாக்குகிறார்கள். என் தந்தையை குறிவைக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சி இது. காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் வெளியேறியது வருத்தம் தான், அவர் ஒரு சிந்தனையாளர். எனினும் சுயேச்சையாக தான் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும்: டிஜிபி சைலேந்திர பாபு