ETV Bharat / state

"பலரின் பசியை போக்கியவர் விஜயகாந்த்” - விஜய் வசந்த் எம்.பி. கண்ணீர் மல்க அஞ்சலி! - சென்னை செய்திகள்

MP Vijay Vasanth: பலரின் பசியை அன்னதானம் மூலமாக போக்கியவர் இன்று நம்முடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது, என விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் எம்.பி. விஜய் வசந்த தெரிவித்துள்ளார்.

mp-vijay-vasanth-condolence-on-captain-vijayakanth
எம்.பி. விஜய் வசந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:23 AM IST

Updated : Dec 30, 2023, 9:51 AM IST

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், டிச.28 காலை காலமானார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக நேற்று காலை 6:00 மணி அளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, விஜயகாந்த் உடல் இறுதி சடங்கிற்காக தீவுத்திடலில் இருந்து அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் அஞ்சலியோடு மாலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக திகழ்ந்த விஜயகாந்தின் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  • மரியாதைக்குரிய கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினேன் #RIPCaptain pic.twitter.com/tERyQgS5Dg

    — VijayVasanth (@iamvijayvasanth) December 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ”நாம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் 'கேப்டன்' இன்று நம்முடன் இல்லை. அவர் சினிமா துறையில் மட்டும் அல்ல; அரசியலில் நிறைய செய்து இருக்கிறார். அவரின் உயர்ந்த உள்ளமும் மக்களின் மீதுள்ள அன்பும் எப்போதும் வியக்கத்தக்கக் கூடியது.

வருபவர்களுக்கு எல்லாம் அன்னதானம் மூலமாக பசியை போக்கியவர் கேப்டன். அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தர்களுக்கும், ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் சினிமாவிம் மட்டும் மின்றி அரசியலிலும் பற்றுக்கொண்டவர் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என கவலையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மெரினாவில் உள்ளதுபோல் கேப்டனுக்கும் சமாதி அமைக்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்து உருக்கம்!

Last Updated : Dec 30, 2023, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.