ETV Bharat / state

'சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது' - கனிமொழி ட்வீட்! - ஹிந்தி_தெரியாது_போடா

இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

Kanimozhi MP tweet about Hindi Imposition T shirts Trending in Twitter

author img

By

Published : Sep 6, 2020, 10:02 PM IST

மத்தியில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து தேசிய மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்து வருகின்றன. இதனிடையே திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாததால் நீங்கள் இந்தியரா? என சிஐஎஸ்எஃப் அலுவலர் கேள்வி எழுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளின்போது தனியார் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டியில், இந்தி மொழி தெரியாததால் விமான நிலையத்தில் தனியாக நிற்க வைத்து விசாரணை நடத்திய விவகாரம் பற்றி பேசினார். இதுவும் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 5) இரவு திடீரென இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக 'இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதனுடன் சேர்த்து இந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்கள் அணிந்து நட்சத்திரங்களும், இளைஞர்களும் புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினர். இது காட்டுத் தீ போல் பரவி சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பதிவுகள் வெளிவந்தன.

இது குறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.

#ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition'' என பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து இந்தி தெரியாது போடா என டீ-சர்ட் அணிந்த இளைஞர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதுவும் இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகியது.

  • ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.#ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition pic.twitter.com/NIzA1DmYVb

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ‘I am a தமிழ் பேசும் இந்தியன்’ - சமூக வலைதளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.