ETV Bharat / state

பயங்கரவாதியென கைது செய்யப்பட்டவர் - நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட கந்தர்ப்ப தாஸை மீண்டும் இன்று காலை சரணடையுமாறு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கந்தர்ப்ப தாஸ்
author img

By

Published : Apr 27, 2019, 10:15 AM IST

தனியார் மருத்துவமனையில் கட்டுமான வேலை செய்து வருபவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கந்தர்ப்ப தாஸ். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் கியூ பிரிவு காவல் துறையினர் இவரை கைது செய்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் இவரிடம் சுமார் 16 மணி விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சந்தேகத்துக்கு இடமான முறையில் இவர் நடந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

இறுதியில், இனி அவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கி கொண்டு காவல்துறையினர் அவரை விடுவித்தனர். இந்நிலையில் கந்தர்ப்ப தாஸை மீண்டும் இன்று காலை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

*update*

இன்று காலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கந்தர்ப்ப தாஸ் 16 மணி நேர விசாரணைக்கு பின்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் இவர் நடந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் இதுபற்றி மேற்குவங்க காவல்துறையினரிடம் தமிழக காவல்துறையினர் இவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்துள்ளனர். இதன் பிறகு சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்துகொள்ள மாட்டேன் என்று காவல்துறையினர் எழுதி வாங்கி கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் நாளை காலை அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு நேரில் வர வேண்டும் எனவும் காவல்துறை கந்தர்ப்ப தாஸிடம் கூறியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.