கந்தபுராணத்தில் 'வான்முகில் வாழாது பெய்க எனும் பாடலில் மன்னன் கோன்முறை அரசு செய்க' என்ற வரியை 'மைந்தன் கோன்முறை அரசு செய்க' என்றும், நான்மறை அறங்கள் எனும் வார்த்தைகளை ஐமறை அறங்கள் என்றும் மாற்றி திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி அடங்கிய வீடியோவில் பதிவிட்டு வெளியிட்டதற்கு சைவ சமய திருத்தொண்டர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராஜபாளையத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ரா.கண்ணன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஜெகசுந்தரி, "திமுக மட்டுமல்லாது வேறு எந்த கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் எதிர்ப்பு தெரிவிப்போம். திருநீறு வைத்தால் அதை அழிக்கும் மு.க.ஸ்டாலின், அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகி கண்ணன் பரப்புரை பாடலில் நடராஜர் சிலையை பயன்படுத்தியது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சென்னையில், நான்காயிரத்தைக் கடந்த கரோனா உயிரிழப்பு!