ETV Bharat / state

புதிதாக கட்டப்பட்ட நீதிமன்றத்தை திறந்தவைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை காணொலி காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி திறந்து வைத்தார்.

Kanchipuram civil court inauguration by CJ MHC

author img

By

Published : Sep 12, 2020, 7:48 PM IST

தமிழ்நாட்டில் தாலுகா அளவில் நீதிமன்றங்கள் இல்லாத 17 தாலுகாகளில் ரூ.9.47 கோடி செலவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் இயங்கிவந்த வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, 50 சென்ட் பரப்பளவில் இயங்கி வந்த அந்த கட்டடம் மற்றும் அதன் வளாகம் சீரமைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்கு தேவையான கூடுதல் கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டன.

ரூ.80.33 லட்சம் மதிப்பீட்டில் செய்யூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான பொறுப்பு நீதிபதிகளாக உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தவாறு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, மக்களுக்கு நீதித் துறையின் மீது உள்ள நம்பிக்கையை காக்க வேண்டிய கடமையை உணர்ந்து திறம்பட செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தன்னுடைய பனிக்காலத்தில் தமிழ்நாடு முழுக்க அதிகப்படியான நீதிமன்றங்களை திறந்து வைத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில சட்டத் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.