சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நாகராஜன் என்பவர், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பர் சங்குகணேசனின் மகள்வழி பேரன் ஆவார். சங்கு கணேசன், சென்னை முத்தையால்பேட்டை வரதா முத்தியப்பன் தெருவில் 1950 இல் சொந்தமாக இடம் வாங்கி ஸ்ரீமகள் கம்பனி என்கிற நிறுவனம் நடத்தி வந்தார்.
அப்போது, அவரது உதவியாளராக ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் அருள்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். ராஜேந்திரன் மறைந்து விட்ட நிலையில், அவரது மகன் அருள்ராஜன் ஆள்மாறாட்டம் செய்து சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சங்குகணேசனின் சொத்துக்களை தனக்கு விற்றது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக நாகராஜன் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த நாகராஜன், "எனது தயார் மற்றும் தாயாரின் உடன்பிறந்த சகோதரிகள் மரணத்திற்கு பின்னர் வாரிசுதாரர் அடிப்படையில் முத்தையால் பேட்டை சொத்து தொடர்பான ஆவணங்களை பெறும்போது மோசடி நடந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. ஏற்கனவே சங்கு கணேசன் தானமாக கொடுத்த சொத்துக்கள் பற்றிய ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து மற்றும் முதையால்பேட்டை சொத்து விற்பனை ஆவணத்துடன் ஒத்துபோகவில்லை என்று புகார் அளித்துள்ளேன்" என்றார்.
இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அருள்ராஜன் புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டுவதாக நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.