ETV Bharat / state

எஸ்பிபி உடல்நிலை குறித்து கமல் வருத்தம்

பிரபல பாடகர் எஸ்பிபி நலமுடன் உள்ளார் என்று கூற முடியாது, அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhassan Visited SPB in hospiatal says singer is in critical condition

author img

By

Published : Sep 24, 2020, 9:08 PM IST

Updated : Sep 24, 2020, 9:16 PM IST

சென்னை: பிரபல பாடகர் எஸ்பிபி நலமுடன் உள்ளார் என்று கூற முடியாது, அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார் என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 24) எஸ்பிபி உடல்நிலைக் குறித்து, அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “கடந்த 24 மணி நேரமாக, எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது” என தெரிவித்துள்ளது. இதையறிந்த நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலைக் குறித்து மருத்துவர்கள், எஸ்பிபியின் குடும்பத்தாரிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல், எஸ்பிபி நலமுடன் உள்ளார் என்று கூற முடியாது. கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். உயிர் காக்கும் கருவிகள் இயங்கி கொண்டிருக்கின்றன" என்றார்.

எஸ்பிபி உடல்நிலை குறித்து கமல் வருத்தம்

இதையும் படிங்க...எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

Last Updated : Sep 24, 2020, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.