கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை, விண்வெளிக்கு அனுப்பினர். ஆனால், நிலவில் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து இஸ்ரோ விக்ரம் லேண்டரைப் பல முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்தப் பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் லேண்டர் காணவில்லை.
லேண்டரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோ, விக்ரம் லேண்டரைத் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டது.
இதனை ஆய்வு செய்த மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார். ஆய்வு செய்து நாசாவும் அதனை உறுதிபடுத்தியுள்ளது.
இந்நிலையில், நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியனை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து மக்கல் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில், சந்திரயான் 2 - விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து, தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கமல் ஹாசன் தெரிவித்தார்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல்!