சென்னை: தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் காமகோடியன். இவர், தமிழின் பழம்பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஆவார், பல தமிழ் படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த காமகோடியன் வயது முதிர்வு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது இறுதி யாத்திரை இன்று மதியம் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காமகோடியனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் எம்எஸ்.விஸ்வநாதன் மேல் உள்ள பிரியத்தின் காரணமாக மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் நானும் எனும் நூலை காமகோடியன் எழுதியுள்ளார்.
சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் இவர் அன்பே என் அன்பே பாடல் மிகவும் பிரபலம். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிஞரும், பாடலாசிரியரான காமகோடியனுக்கு 2019ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க:24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு.. அசூர வேகத்தில் பரவும் கரோனா!