திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து ஓராண்டானதையொட்டி அக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகைபுரிந்த வண்ணம் உள்ளனர்.
அந்தவகையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கருணாநிதி மரிக்கவில்லை; தத்துவ உடலாக வாழத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி உயிரோடு உள்ளது எனக் குறிப்பிட்ட வைரமுத்து, கருணாநிதி தத்துவங்களால் வாழ்ந்துகொண்டிருப்பார் எனவும் எப்போதும் மறையமாட்டார் என்றும் கூறியுள்ளார்.