ETV Bharat / state

நானே முதலமைச்சர் வேட்பாளர்: இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியால் ஜெயிக்க முடியுமா - கே.சி. பழனிசாமி - cm candidate 2021 election

சென்னை: அதிமுக, இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியுமா? என்று கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

kc palanisamy
kc palanisamy
author img

By

Published : Aug 13, 2020, 5:43 PM IST

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ''சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதலமைச்சர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக இயங்கும்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலக்கை நிர்ணயித்து களம் அமைப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் இருவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமியிடம் கேட்டபோது, "அமைச்சர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிப்பது அதிமுகவிற்கு நல்லதல்ல. 2017ஆம் ஆண்டில் அதிமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் நான் உள்பட மூத்த நிர்வாகிகள் இருக்க வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், வழிகாட்டி குழுவை இன்று வரை அதிமுக அமைக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து, குழுவின் முடிவின் அடிப்படையில் கட்சியை வழிநடத்த வேண்டும். அவ்வாறு குழு அமைக்கவில்லையென்றால் அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும்.

அந்த 11 பேர் குழுவில் சசிகலாவை சேர்த்து கொண்டாலும் தவறில்லை. தமிழ்நாடெங்கும் செல்வாக்கு பெற்ற தலைவர் அதிமுகவில் யாரும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே, மக்கள் சமூதாய ரீதியில் வாக்களிப்பவர்கள் அல்ல, ஆனால் நீங்கள் சமூதாய ரீதியில் மக்களை சந்தித்தால் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி தற்போது சமுதாய ரீதியாக அரசியல் செய்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தது. ஜெயலலிதா மறைவையடுத்து, டிடிவி தினகரன் புதிதாக கட்சி தொடங்கி தனி அணியாக உள்ளார்.

அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் பாஜகவிடம் அடிமையாக உள்ளது என்ற கெட்ட பெயர், இதையெல்லாம் தாண்டி அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அதில் நான், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்பட மூத்த நிர்வாகிகள் சேர்ந்து கட்சியை வழிநடத்தி முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்ய வேண்டும்.

அப்போது தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் திமுக ஆட்சியை பிடிக்கும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர முயற்சிக்கும். பாஜக ரஜினியுடன் கைக்கோர்த்து தேர்தலை சந்தித்து வேகமாக முன்னேறி செல்வார்கள். இதனால் அதிமுக மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கும்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யாரும் விரும்பவில்லை. அதிமுக இல்லாமல், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? முதலமைச்சர் வேட்பாளராக நானே இருக்கிறேன். இதற்கு சசிகலா தரப்பில் ஆதரவு இருக்கிறது. நான் முதலமைச்சராகவும், சசிகலா பொதுச்செயலாளராகவும் இருந்தால் பிரச்னை இல்லை என்றார்.

இதையும் படிங்க: பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்; பராமரிப்பு இல்லாத அவலம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.