ETV Bharat / state

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு - கே.பாலகிருஷ்ணன் வேதனை!

பெரம்பலூர் மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 3, 2022, 3:44 PM IST

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை காரணமாக, உயிரிழந்த 17 வயது சிறுமி வழக்கு தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது.

பெரம்பலூர் மாணவி விவகாரத்தை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழகம் உட்பட இந்தியாவில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சமுதாயம் சீரழிவை சந்திக்கும்.

அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி; அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு என மத்திய அரசின் உள்துறை எந்த விதமான குறையும் கூறியதாக தெரியவில்லை. எனவே, அண்ணாமலை அரசியலுக்காக இதை பேசி வருகிறார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நகை பணத்துடன் புதுமணப்பெண் மாயம் - இரண்டாவது கணவருடன் சேர்ந்து கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.