அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார்.
இக்குழுவினர் கலையரசன் தலைமையில் தீவிரமாக செயல்பட்டடு, அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ படிப்பில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள், மேலும் நீட் தேர்வில் மருத்துவ மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதற்கான மதிப்பெண் அடிப்படை போன்றவை குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
அதுமட்டுமன்றி கல்வியாளர்கள், பெற்றோர்கள் போன்றவர்களிடமும் கருத்து கேட்டனர். அதனடிப்படையில் தனது பரிந்துரையை அரசுக்கு கலையரசன், முதலமைச்சரிடம் அறிக்கையாக அளிக்கவுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடாக 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடுவரை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6,000 இடங்களில், 15 விழுக்காடு எனில் 900 இடங்களும், 20 விழுக்காடு எனில் 1200 இடங்களும் கிடைக்கலாம்.
அதனடிப்படையில் இந்த ஆண்டு முதலே, மருத்துவ படிப்பு சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.