1. கரோனா பரவல், ஊரடங்கு குறித்து பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
2.ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்க கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது.
3. திருப்பூரில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆடைகளுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்துவது குறித்த ஆன்லைன் கருத்தரங்கு இன்று நடக்கிறது.
4. குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணை திறக்கப்படுகிறது.
5.கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சென்னையில் இன்றுமுதல் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.
6.மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.