கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அதிமுக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் உத்தரவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில், அதிமுக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி சேஷசாயி நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று (ஜன.5) காலை 10.30 மணிக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம்... தமிழ்நாட்டில் கல்லா கட்டும் வேலை!'