ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்; தேர்தல் நடத்தலாம்.. ஆனால், முடிவு அறிவிக்கக்கூடாது - முழுவிவரம்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதித்தும், முடிவுகளை வெளியிடத் தடை விதித்தும், வழக்கை தெலுங்கு வருட பிறப்பு அன்று சிறப்பு வழக்காக விசாரிக்கவும் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

judge adjourned the AIADMK general secretary election case to March 22
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கினை மார்ச 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
author img

By

Published : Mar 19, 2023, 3:14 PM IST

சென்னை: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகக் கூறி, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக்காலம் 2026 வரை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், வார இறுதி நாட்களில் வேட்புமனுதாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று (மார்ச் 19) அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பொறுமையாக விசாரிப்பதில் எங்களுக்கு பாதகம் இல்லை. தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என 2017-ல் அறிவித்து விட்டு, கட்சி கொள்கைக்கு எதிராக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மட்டுமே ஏற்றுக்கொண்டது. தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், சாதாரண தொண்டனும் கட்சித் தலைமைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் மொத்தமாக 70 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், என கட்சி விதிகளுக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 கோடியே 55 லட்சம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 327 முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பொதுவானதாக கருத முடியும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி பொதுச்செயலாளர் பதவிக்கான அறிவிப்பினை வெளியிட முடியும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 வரை பதவியில் தொடரலாம்' என வாதம் முன் வைக்கப்பட்டது.

அதிமுக தரப்பில், ’பொதுச்செயலாளர் தேர்தல் கட்சி உள்விவகாரங்களில் தொடர்புடையது. நீக்கப்பட்டவர்கள் எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்குத் தொடர்ந்தவர்கள் ஓபிஎஸ் சார்பாக தொடர்ந்துள்ளனர். வழக்குத் தொடர்ந்தவர்கள் நேரடியாக தேர்தலால் பாதிக்கப்படவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டாலும், அனைத்து தீர்மானங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பின்புலத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு ஒரு நாளில் வெளியிடவில்லை.

புதிய இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அதிமுக வளர்ச்சியைப் பிடிக்காத எதிரிகள், அதிமுகவின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்க விரும்புகின்றனர்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியா? என்ன அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை மட்டுமே விசாரித்தது. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை எதிர்க்கவில்லை. பொதுக்குழு ஒற்றைத் தலைமையை விரும்பியது. 1 கோடியே 65 லட்சம் பேர் ஒற்றைத் தலைமையை விரும்பினர். அதனால், பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தீர்க்கப்படாத களங்கத்தை அதிமுக மீது ஏற்படுத்தவே பன்னீர்செல்வம் சார்பில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களைப் பிரிதிபலிக்கும் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கலாம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வெளியிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்படாத முடியாத நிலையில், மனுதாரர்கள் எப்படி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வழக்குத் தொடர முடியும். சங்க விதிகளின் படி எந்த உறுப்பினரும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ல் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. மீண்டும் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் எந்த விதிமீறல்களும் இல்லை. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி கொண்டுவரப்பட்டது. 2017-ல் கட்சி விதி திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாற்றப்பட்டது.

தற்போது 2022-ல் பொதுக்குழுவில் மீண்டும் அடிப்படை உறப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி திருத்தப்பட்டது. சங்க விதிகளின் படி கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டிய காரணம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தெலுங்கு வருடப்பிறப்பில் சிறப்பு அமர்வாக விசாரிக்கக் கோரி மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.