ETV Bharat / state

‘திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ - ஜெயக்குமார் விமர்சனம்

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat ஜெயக்குமார்
Etv Bharat ஜெயக்குமார்
author img

By

Published : Aug 27, 2022, 9:46 PM IST

சென்னை தங்க சாலையில் நடைபெற்று வரும் நாகாத்தம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "சென்னையில் லேசான மலைக்கு கூட அதே இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலைமை. மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒரு மாற்று பாதைக்கான பதாகை கூட வைக்காமல் காவல்துறை செயல்படுகிறது.

அதிமுக ஆட்சியில் பிரதான மலைக்கு கூட பெருமளவில் கால்வாய்களில் தண்ணீர் தேங்கவதில்லை. ஆனால் தற்பொழுது அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. அதிமுக காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் எவையும் சீராக பராமரிக்கப்படவில்லை. மேலும் அதிமுகவிற்கு நல்ல பெயர் வரக்கூடாது என்ற திமுகவின் ஈகோவால் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

அதேபோல் ராயபுரம் தொகுதி எம்எல்ஏ பெயருக்கு எம்எல்ஏவாக இருக்கிறார். தொகுதியில் எந்த ஒரு பணியும் செய்யாமல் அரசிடம் சம்பளமே மட்டுமே வாங்குகிறார். ஆனால் தொகுதிக்கு வந்து எட்டிப் பார்க்கவில்லை தற்பொழுதும் ராயபுரம் தொகுதிக்கு எம்எல்ஏ யார் என குழந்தைகளிடம் கேட்டால் என்னை தான் கூறுவார்கள், திமுகவின் எம்எல்ஏவை இங்கு அதிகமானோருக்கு தெரியவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மக்களுக்கு பேருந்து, சத்துணவு உள்ளிட்ட அதிகமான திட்டங்களை கொண்டு வந்தார். அதேபோல் ஜெயலலிதா பெண்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் விலை இல்லா மடிக்கணினி, மிதிவண்டி எல்லாம் விடியா அரசு மாற்றி வருகிறது. மேலும் திமுக கொண்டு வந்த விலையில்லா திட்டங்கள் அனைத்தும் ஊதாரி திட்டங்களாக தான் இருக்கிறது.

எட்டு வழிசாலையை அப்போது எதிர்த்த திமுக தற்பொழுது ஆட்சிக்கு வந்ததும் பல்டி அடிகிறார்கள். குறிப்பாக
பொதுப்பணி துறை எ.வ.வேலு அமைச்சர் குழந்தைகளுக்கு கிளுகிளுப்பு காட்டி விளையாட்டு காட்டுவது போல் மக்களிடம் விளையாட்டு காட்டுகிறார். பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளின் பத்தாயிரம் ஏக்கர் நிலம் அழியப்போகிறது. விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் விவசாயிகளை நோகடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் இதனை பொறுக்காமல் பொங்கி எழுந்தால் இந்த ஆட்சி தாங்காது.

எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கு சீர்கேடாக உள்ளது என்பது குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து வந்த கடுதாசி மொட்ட கடுதாசி. திமுக செய்யும் குற்றங்களை மறைக்கத்தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு, திமுகவிற்கு உதவும் காவல்துறையினருக்கு தற்பொழுது பாதுகாப்பில்லை. காவல்துறையினர் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. அவர்களின் நிலைமை பரிதாபம் ஆகிவிட்டது. காவல் துறை மு.க. ஸ்டாலின் குடும்பத்தினரின் ஏவல் துறையாகிவிட்டது.

ஆந்திராவில் நடந்த நிகழ்வு போலவே மாமனாரை கவுத்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப்போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது. திமுக ஒரு ஹிட்லர் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு துணை போகும் கட்சியின் ஆட்சி ஆகும். காவல் துறையினரை சுதந்திரம் இல்லாமல் விடியா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மட்டுமே குற்றவாளிகளுக்கு பயம் என்பது பறந்து போய், சிசிடிவிக்கு முத்தம் கொடுத்து குற்றவாளி செல்லும் சம்பவம் எல்லாம் அரங்கே இருக்கிறது" என கூறினார்.

இதையும் படிங்க: சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்தாதது ஏன்... நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.