ETV Bharat / state

தேர்தல் அலுவலரை ஏமாற்றிய நகை வியாபாரி கைது! - தங்க நகை பறிமுதல்

சென்னை: தேர்தல் அலுவலரிடம் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை சமர்பித்து மோசடியில் ஈடுபட்ட நகை வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Mar 12, 2021, 9:18 AM IST

சென்னை அண்ணா நகர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 9ஆம் தேதி நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தன.

இதனையடுத்து நகைகளை கொண்டு சென்ற நபரிடம் நடத்திய விசாரணையில், சவுகார்பேட்டையை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பதும் நகை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இந்த 12 கிலோ நகைகளை விருத்தாசலம் மாவட்டத்தில் விற்பதற்காக கொண்டு செல்லும் போது சிக்கியதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், அவரிடம் நகைக்கு உண்டான ஆவணங்களை காண்பித்ததால் தேர்தல் பறக்கும் படையினர் அழைக்கும் நேரத்தில் நகையுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கி கொண்டு சந்திரபிரகாஷை அனுப்பினர். இந்த நிலையில், நேற்று (மார்ச் 11) விசாரணைக்காக அண்ணா நகர் தேர்தல் அலுவலர் ஆனந்த்குமார், சந்திரபிரகாஷை தொடர்பு கொண்டு நகைகளை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சந்திரபிரகாஷ் நகைகளை கொண்டு வந்து தேர்தல் அலுவலரியடம் காண்பித்துள்ளார். அப்போது தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை தேர்தல் அலுவலரியடம் சமர்பித்து ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணா நகர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை காவல்துறையினர் சந்திரபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.