ETV Bharat / state

ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு! - JEE Postponed

சென்னை: ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் அறிவித்துள்ளார்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு
ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு
author img

By

Published : Mar 31, 2020, 8:21 PM IST

ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது, தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஏப்ரல் மாதம் 5, 7, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வு மே மாதம் இறுதி வாரம் நடைபெறும். இதற்கான தேதிகள் வரும் நாள்களில் ஏற்படும் சூழ்நிலையை பொருத்து அறிவிக்கப்படும். விரைவில் மீண்டும் பழைய நிலை திரும்பும் என நம்புவோம்.

தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் சூழ்நிலையை பொறுத்து வழங்கப்படும். மேலும், விவரங்களை Jermain.nta.nic.in, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், 8287471852, 8178359845, 965173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தை ஒத்திவைத்த இஸ்லாமியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.