சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 74 கிலோ எடை கொண்ட கேக் வெட்டியதுடன் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மேள தாளம் முழங்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க:சென்னை முதல் கன்னியாகுமரி வரை திமுகவின் கோட்டை - திமுக எம்பி ஆ ராசா