சென்னை நடுக்குப்பத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழிசை கடுமையான உழைப்பாளி. அவருக்கு பாஜக அங்கீகாரம் கொடுத்துள்ளது, அதிமுகவினருக்கு மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை விட அதிக மகிழ்ச்சி திமுக தலைவர் ஸ்டாலின் அடைந்திருப்பார். ஏன் என்றால் தமிழிசையின் குரல் இங்கு இருக்காது என்பதால்.
முதலமைச்சர் வெளிநாடு போகவில்லை என்றாலும் ஏன் என்பார்கள், போனாலும் ஏன் என்பார்கள். எனவே, அனைத்தும் வெளிப்படையாக நடந்து வருகிறது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் சென்றுள்ளார். அவசியம் ஏற்படுவதால் பிற அமைச்சர்களும் செல்ல வேண்டியது உள்ளது. இதனை விமர்சிப்பவர்கள் பொறாமையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஸ்டாலின் பலமுறை பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அதனை நாங்கள் யாரும் பிரச்னை ஆக்கவில்லை.
மூன்றரை லட்சம் கோடிக்கான அவுட் கம் என்பது இனிதான் வர உள்ளது. இது தொடர்பாக பல்வேறு பணிகள் உள்ளது. திமுகவில் மாடாக, ஓடாக தேய்ந்து உழைத்தவர்கள் இருக்கும் போது, அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் வழக்கம் திமுகவில் உள்ளது. யாருக்கு என்ன பதவி கொடுத்தாலும், அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது. தங்க.தமிழ்ச்செல்வனை பழி கொடுக்கவே அலங்காரப் பதவிகளை திமுகவில் கொடுக்கிறார்கள்" என்று விமர்சித்தார்.