ETV Bharat / state

‘தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தற்போது டெல்லியில் இருக்கிறார்கள்’ - ஜெயக்குமார்

author img

By

Published : Jun 19, 2019, 7:37 PM IST

சென்னை: தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தற்போது டெல்லியில் வியாபாரிகள் ஆகியுள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு - 2019’ என்ற சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. அதனை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் நம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான். மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. இறால் உள்ளிட்டவற்றை வளர்ப்பதன் மூலம் நம் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா வளங்களையும் பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஜெயக்குமார் பேச்சு

100 விழுக்காடு மழையில் 40 விழுக்காடு மழைதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 60 விழுக்காடு மழை இல்லாதபோது, அதைவைத்து அரசியல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வீராணம் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அதேபோல், திமுக எம்.பி.க்கள் பதவியேற்பின் தமிழ் வாழ்க என கூறியது குறித்த கேள்விக்கு, “தமிழ் எங்கு ஒலிக்க வேண்டும், ஆனால் ஏட்டிக்கு போட்டியாக திமுகவினர் செயல்பட்டுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழுக்கு திமுக என்ன செய்தது. திமுக 17 வருடமாக ஒன்றுமே செய்யவில்லை. மேலும் திமுகவினருக்கு தமிழ் வியாபாரம்தான், தமிழை நேசிக்கிற ஒரே இயக்கம் அதிமுக. தற்போது டெல்லியில் அவர்கள் வியாபாரிகள் ஆகியுள்ளனர்” என தெரிவித்தார்.

Intro:தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள், தற்போது டெல்லியில் வியாபாரிகள் ஆகியுள்ளனர் என அண்மையில் பதிவேற்ற திமுக எம்.பிக்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.Body:ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு - 2019 என்ற சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைப்பெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைப்பெறுகிறது. அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் மேடை பேச்சு:

1990களில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் 67சதவீதம் மட்டுமே மனித தேவைக்கு உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அதிலிருந்து படி படியாக உயர்ந்து 2016ஆம் ஆண்டில் 88சதவீதமாக உற்பத்தி உயர்ந்துள்ளது என்றார்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் blue revolution என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது முக்கியமாக நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்தவும், மீனவர் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் உதவுகிறது எனக் கூறினார்.Conclusion:அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் நம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் என்றும், மாநாடு தமிழகத்தில் நடைபெறுவது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று எனக் கூறினார்.

மேலும் இறால் உள்ளிட்டவற்றை வளர்ப்பதன் மூலம் நம் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் இருக்கும் எல்லா வளங்களையும் பெருக்குவதற்கு தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மீன்வளப் பல்க்கலைகழத்தின் படிப்புகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதால் தான் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். மேலும் கேம்ப்ஸ் இன்டர்வியூ நடத்துவது குறித்து ஆலோசிக்கபடும். மீன்வளப்பல்கலை கழகப் படிப்புகள் குறித்து விழிப்புணர்வுகள் குறித்து ஒவ்வொரு ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாம் விவாதிக்க வேண்டிய ஒன்று என்று கூறிய அமைச்சர், குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்ட பின் இதனை நடைமுறை படுத்துவது நல்லது என தெரிவித்தார்.

100% மழையில் 40% மழை தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 60% மழை இல்லாத போது இதில் அரசியல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்ற அவர், வீராணம் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும், நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

நீர் மேலாண்மைக்காக பல்வேறு பணிகள் நடைபெற்றது, தற்போதும் அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி குடிநீர் பிரச்சனையை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனக் கூறினார்.

மீன் பிடி தடைகாலம் என்பது எல்லா கடற்கரை மாநிலங்களும் சேர்ந்து எடுத்த முடிவு. மேலும் மீன்படி தடை காலம் மாற்றுவது குறித்து பரீசிலை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு மாநிலம் சார்ந்த்து அல்ல , எல்லா மாநிலங்களும் ஒண்றினைந்து எடுக்க வேண்டிய முடிவு என்றார் அமைச்சர்.

அணுக்கழிவு மையம் அமைக்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றும், ஜூலை 10ம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இருக்கிறது. இதில் மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.

திமுக எம்பிகள் பதிவேயிற்றபின் தமிழ் வாழ்க என கூறியது குறித்த கேள்விக்கு, தமிழ் எங்கு ஒலிக்க வேண்டும், ஆனால் ஏட்டிக்கு போட்டியாக திமுகவினர் செயல்பட்டுள்ளர். மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழுக்கு என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், திமுக 17 வருடமாக ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாடினர். மேலும் திமுகவினருக்கு தமிழ் வியாபாரம் தான், தமிழை நேசிக்கிற ஒரே இயக்கம் அதிமுக. தற்போது டெல்லியில் அவர்கள் வியாபாரிகள் ஆகியுள்ளனர் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.