ETV Bharat / state

Jawan audio launch: அட்லீ சொன்ன குட்டி கதை..என்னனு தெரியுமா..? - அட்லீ சொன்ன குட்டி கதை

சென்னையில் தனியார் கல்லூரி அரங்கில் பிரம்மாண்டமாக நடந்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அப்படத்தின் இயக்குநர் அட்லீ தனது வெற்றியைக் குறித்து குட்டி கதை ஒன்றை கூறி எடுத்துரைத்தார்.

Jawan audio launch
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:27 PM IST

சென்னை: ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர் திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு ஜவான் படத்தின் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது: விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி ரசிகர்களை பார்த்து, "உங்களது இந்த எனர்ஜி என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. உங்களால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்கிறது. லவ் யூ ஆல்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இயக்குநர் அட்லீயால் தான் இந்த படம் தொடங்கியதாக கூறினார். அவர் இங்கிருந்து நிறைய பேரை‌ மும்பைக்கு கூட்டிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இப்படத்தில் தன்னை நிறைய வேலை வாங்கி சாகடித்தார் என நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஜானு இல்லாத ராம் எங்கு இருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் அப்போது ஷாருக்கானை காதலித்தது. அதற்கு பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. ஒரு வழியாக பழிவாங்கிவிட்டேன்" என ஷாருக்கானை பற்றி பேசினார்.

நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கான் வேகமாக சிந்திப்பது தனக்கு வியப்பாக இருப்பதாக தெரிவித்த விஜய் சேதுபதி, யோகிபாபு குறித்து பேசும் போது, அவருடன் நடிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து தான் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து படம் நடிப்பதாகவும், அனைத்து ஹிந்தி திரையுலக கதாநாயகிகளையும் தனக்கும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

சிறப்பு வீடியோவுடன் வரவேற்கப்பட்ட இயக்குநர் அட்லீ: அனைவரையும் சந்தித்து நான்கு வருடம் ஆகிவிட்டதாகவும், கடைசியாக பிகில் இசை வெளியீட்டு விழாவில் இதே இடத்தில் பார்த்ததாகவும் தெரிவித்தார். சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் முக்கிய சாதனையாளர் டாக்டர் வீரமுத்துவேல் இதே கல்லூரியில் படித்தவர். இந்த கல்லூரியில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டேன்" என கூறினார்.

இந்த படம் செய்வதற்கான முக்கிய காரணம் தனது அண்ணன் விஜய் தான் என கூறி, நடிகர் விஜய்க்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய இயக்குநர் அட்லி 13 ஆண்டுகளுக்கு முன் எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் போது ஷாருக்கான் வீட்டின் கேட் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டதாக தெரிவித்து, இத்தனை ஆண்டுகளுக்கு பின் அங்கு செல்லும் போது அந்த கேட் தனக்காக திறந்ததாக இருந்தது என பெருமிதம் கொண்டார்.

பின் நடிகர் ஷாருக்கானை பற்றி பேசும் போது, அவர் தன்னை மிகவும் மதிப்பதாகவும், தன்னை கேட்காமல் எதுவும் பேச மாட்டார் என்றும், தன்னை முதல் நாள் சந்தித்தது இந்த நாள் வரை தன்னை மதிப்பதாக புகழ்ந்த இயக்குநர் அட்லீ, அவரை தனது தந்தையை விட மேலானவர் என்று உருக்கமாக கூறினார்.

தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை குறித்து பேசும் போது, அவர் படத்தின் மற்றொரு ஹீரோ என கூறினார். மேலும் நடிகை நயன்தாராவை பற்றி பேசும் போது, அவரை தன்னுடைய டார்லிங் என குறிப்பிட்டு பேசினார். மேலும் இந்த படத்தில் 13 பாடல்கள் உள்ளதை குறிப்பிட்டு பேசிய அட்லீ, பாடலாசிரியர் விவேக் வசனம், கதை என அனைத்து துறையிலும் தனக்கு உதவியதாக இருந்ததாக கூறினார்.

அட்லீயின் குட்டி கதை: தன்னை பற்றி வெளியாகும் நெகடிவ் கமெண்டுகள் குறித்து கேட்கும் போது, குட்டி கதையுடன் விளக்கினார். "ஒரு மான் பிரசவ வலியோடு நடுகாட்டில் தவிக்கிறது. ஒரு புறம் புலி தன்னை வேட்டையாட கத்திருப்பதை கண்டு பயந்தது. மறுபுறம் ஒரு வேடன் தன்னை வேட்டையாட காத்திருந்ததை கண்டு பயந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஓடும் போது இடி இடித்து பெரிய மரம் தீ பிடித்து எறிந்தது.

பயத்தில் திகைத்து போன மான் கண்களை இருக்கி மூடவே, வானில் அடுத்த இடி இடிக்க, அதன் ஒளி வேடனின் கண்ணை பாதிக்க, அவன் ஏந்திய அம்பு புலியை தாக்க, புலி கீழே சரிந்தது. பற்றி எரிந்த நெருப்பை கொட்டும் மழை அணைத்தது. மான் கண் விழிக்கும் போது காடு மொத்தமும் அமைதியாக இருந்தது, மானின் கையில் தன் குட்டியோடு மகிழ்ந்தது" என்று தன் குட்டி கதையை கூறினார். தொடர்ந்து பேசிய இயக்குநர் அட்லீ, என் தலைவன் சென்னது போலை என்று கூறி Ignore the negativity என நடிகர் விஜயின் வசனத்தை மேற்கோள் காட்டி தன் மீது வரும் நெகடிவ் கமெண்டுகள் அப்படியே தவிர்த்து விடுவதாக கூறினார்.

அட்லீயின் வெற்றியின் ரகசியம் என்ன? இயக்குநர் அட்லீயிடம் தன்னுடைய வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு, இந்த படம் துவக்கத்தில் தன் மனைவியுடன் வெளிநாடு சென்ற போது அவர் கர்ப்பமுற்றது தெரியவந்தாக கூறினார். மேலும் தாங்கள் எட்டு ஆண்டுகள் பின்னர் பெற்றோர் ஆனதாக தெரிவித்தார் அட்லீ. அனால் படப்பிடிப்பிற்காக தாயகம் திரும்பும் கட்டாயம் இருந்த போது. தன்னுடைய மனைவி, "நான் 9 மாதங்களில் சுமந்து விடுவேன், ஆனால் நீ உண் கனவை 3 ஆண்டுகளாக சுமக்கிறாய்" என்று கூறியதாக தெரிவித்தார்.

மேலும் தன் மனைவி அளித்த தைரியம் தான் தன்னை இப்படத்தை வெற்றிகரமாக இயக்க வைத்த காரணம் என்றும், தன் மனைவி தான் தன்னுடைய வெற்றியின் ரகசியம் என்றும் அட்லி கூறியதை கேட்டு அவரது மனைவி நெகிழ்வில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். பின்னர் அவரை மேடைக்கு அழைக்க, மேடைக்கு வந்து அட்லீயை கட்டி அனைத்து அரவணைத்து கொண்டார்.

இதையும் படிங்க: D-51 : தனுஷுடன் கைகோர்க்கும் நாகார்ஜூனா - D-51 படத்தின் அப்டேட் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.