இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வென்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறியுள்ளேன்.
தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மலரவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களில் 20 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுகொடுத்து, ஒரே லட்சியமான பாஜக ஆட்சியை, தவறுகளை திருத்தக்கூடிய வகையில் ஒரு சிறப்பான கூட்டணி அமைத்தார். வட இந்தியாவில் மற்ற மாநிலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் போல் விட்டு கொடுத்து அனைவரையும் அனுசரித்து தெளிவான கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவிற்கு இந்தளவு வெற்றி கிடைத்திருக்காது" தெரிவித்தார்.