ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள் #EtvBharatNewsToday

author img

By

Published : Jan 5, 2021, 6:53 AM IST

Updated : Jan 5, 2021, 7:25 AM IST

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்

கொச்சி- மங்களூரு குழாய் எரிவாயு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.5) தொடங்கிவைக்கிறார். காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த விழாவில் இரு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். கெயில் இந்தியாவால் தொடங்கப்பட்டுள்ள, 450 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கொச்சியிலிருந்து கர்நாடகா செல்கிறது.

கொச்சி- மங்களூரு குழாய் எரிவாயு திட்டம் தொடக்கம்

பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று (ஜன.5) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்யும்
கனமழை பெய்யும்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதுதாங்கல் பகுதியின் முல்லை நகர், ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கல்யாண் நகர், பாரதி நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், அமுதம் நகர், குறிஞ்சிநகர் பகுதியிலும், கும்மிடிப்பூண்டி பகுதி சித்தராஜகண்டிகை, மாதரபாக்கம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருமுடிவாக்கம் பகுதி குன்றத்தூர், தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், சிருகளத்தூர், கெளுத்திப்பேட்டை, நந்தபாக்கம், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர், வழுதலம்புடு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர் 2 மணிக்கு மின்சாரம் கிடைக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தம்
மின் விநியோகம் நிறுத்தம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.5) நடைபெறுகிறது. இதில், போக்குவரத்து துறையை சேர்ந்த உயர் அலுவலர்கள், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த ஆலோசனை

Last Updated : Jan 5, 2021, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.