ETV Bharat / state

ஜெயிலர் வெற்றி விழா : ரஜினி, நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்பு! - ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்

Jailer Victory Function : உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் கடந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னையில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

jailer-movie-success-meet-in-chennai
jailer-movie-success-meet-in-chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 10:39 AM IST

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் அடித்தன.

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடியே 40 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக பட தயாரிப்பு குழுவான சன் பிக்சர்ஸ் தரப்பில் தகவல் வெளியானது. இதுவரை ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த நடிப்பில் இதற்கு முன் வெளியான பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றலும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில் ஜெயிலர் வெற்றியால் ரஜினிகாந்த மிகுந்த மகிழ்சி அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே விக்ரம் படம் கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கார் கொடுத்தது போல, நடிகர் ரஜினிகாந்த, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாலர் அனிருத் மூவருக்கும் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் பணியாற்றில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஜெயிலர் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கபட்டன.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னையில் சக்சஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஜெயிலர் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசை அமைப்பாளர் அனிருத், காமெடி நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, ஜாபர், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி விழாவில் ஜெயிலர் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி விழாவில் படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: Actress Vijayalakshmi Video : நடிகை விஜயலட்சுமி தற்கொலை முடிவு.. புதிய வீடியோ வெளியிட்டு பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.