சென்னையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24). இவர் கூலி தொழில் செய்துவருகிறார்.
இவரது வீட்டின் அருகில் 17 வயது சிறுமி +2 படித்துவருகிறார். அக்டோபர் 11 ஆம் தேதி சிறுமி, சுரேஷ்குமார் ஆகியோரின் குடும்பத்தினர் தெரிந்தவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, சுரேஷ்குமார் பாலியல் தொல்லை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் லதா தலைமையில் காவல் துறையினர் சுரேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் சுரேஷ்குமாரை கைதுசெய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இணங்க மறுத்ததால் பேருந்து உரிமையாளர் ஆத்திரம்!