ETV Bharat / state

சென்னையில் நிலநடுக்கம் வருமா,வராதா? - கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் தந்த அதிர்ச்சித் தகவல்! - Soil testing during construction of buildings

'சென்னை மாநகரம் முழுவதும் களிமண் தன்மையைக் கொண்டது. உதாரணமாக ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்தால் எப்படி நிற்குமோ, அதுபோலவே களிமண் மீது சென்னை அமைந்துள்ளது' என கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னையில் நிலநடுக்கம் வருமா,வராதா? - கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் தந்த அதிர்ச்சித் தகவல்!

author img

By

Published : Feb 16, 2023, 7:50 PM IST

Updated : Feb 16, 2023, 8:18 PM IST

சென்னையில் நிலநடுக்கம் வருமா,வராதா? - கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் தந்த அதிர்ச்சித் தகவல்!

சென்னை: பூகம்பம் ஏற்படும்போது, பாதுகாத்துக்கொள்ளும் வகையில், அதிலிருந்து காத்துக்கொள்ள எவ்வாறு கட்டுமானங்களை நிறுவ பெற வேண்டும் என்பது குறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் கட்டட வல்லுநர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழ்நாட்டில் நிலநடுக்கம் வருமா? அல்லது வராதா என்பது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.

அப்போது பேசிய அவர்கள், ''சிரியா மற்றும் துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர், அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இந்தியாவில் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை 5 பகுதிகளாகப் பிரித்துள்ளனர். எனவே, நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கட்டடங்களை கட்ட வேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தமிழ்நாடு 2வது மண்டலத்தில் உள்ளது. சென்னை 3-வது மண்டலத்தில் உள்ளது. சென்னையில் கட்டடங்களை கட்டும்பொழுது மண் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். வீடு கட்டும்போது அதற்கான வரைபடங்கள் சரியாக போடப்பட்டு, நில நடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும்.

குறிப்பாக கட்டடத்தின் அடித்தளம் மற்றும் காலம்ன்கள்(தூண்கள்) தேவையான இடங்களில் சரியாக அமைக்கப்பட வேண்டும். கட்டடங்களில் அழகு வேண்டும் என்பதற்காக தேவையான இடங்களில் தூண்களை அமைக்காமல் விட்டுவிடக் கூடாது.

அதேபோல், வீடுகளை கட்டி முடித்தவுடன் உரிய பராமரிப்பு செய்யப்பட வேண்டும். சென்னை மாநகரம் முழுவதும் களிமண் தன்மை கொண்டது. ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்தால் எப்படி நிற்குமோ, அதுபோலவே களிமண் மீது சென்னை உள்ளது.

தயிரை கலக்கும்பொழுது எப்படி நாணயம் உள்ளே செல்லுமோ, அதுபோலவே பூகம்பம் ஏற்பட்டால் சென்னை கலங்கும். எனவே, ஒரு மனையை கட்டிய அதே அளவில் மற்ற மனையிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல், அந்த இடத்தின் மண் தன்மைக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும்.

வீடுகளுக்காக உபயோகிக்கும் பொருட்கள் தரமானதாக பயன்படுத்த வேண்டும். சென்னையில் தற்போது பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் மணல் தரமாக இல்லை. இந்த எம்.சாண்ட், மணலை வைத்து இன்று கட்டடம் கட்டும்பொழுது நன்றாக இருக்கும்.

எதிர்காலங்களில் இதனால் பெரிய அளவில் விபரீதங்கள் ஏற்படும் போதுதான், அதைப் பற்றி பலர் பேசுவார்கள். கட்டுமான விதிகள்படி கட்டடம் கட்டினால் ஒன்றும் ஆகாது. வீடுகள் நிலைமை குறித்து 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

அதற்கான அனுமதிச் சான்றிதழை ஒட்டி வைக்க வேண்டும். கட்டுமானப் பட்டப்படிப்பில் தற்போது ஒரு சில கல்லூரிகளில் தரமான பொறியியல் மாணவர்கள் உருவாக்கப்படுவதில்லை'' என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரயில் நிலையமாக மாறிய தனியார் பள்ளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Last Updated : Feb 16, 2023, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.