ETV Bharat / state

பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி

மரபுகளை பின்பற்றாமல் நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி
பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி
author img

By

Published : Jul 12, 2022, 4:10 PM IST

சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழா, ஜூலை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இணை வேந்தரான என்னிடம், எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை.

அதேநேரம், உயர் கல்வித்துறை செயலாளரிடமும் ஆலோசனை நடத்துவதில்லை. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது?

ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநராக இல்லாமல், பாஜகவிற்கு பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் உள்ளார். இவ்வாறு பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்.

இது போன்ற பிரச்னைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து, ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இன்னும் கையொப்பம் இடவில்லை. இதேபோல ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

மேலும், ஆளுநர் திராவிடம் குறித்து பேசும்போது வரலாற்றை தெரிந்த பின்பு பேச வேண்டும். எத்தனை இசங்கள் இருந்தாலும் ஹூமானுசமான மனிதாபிமானம் தான் திராவிட மாடல்” என கூறினார்.

இதையும் படிங்க: திராவிடர் குறித்த தமிழ்நாடு ஆளுநரின் கருத்திற்கு டி.ஆர்.பாலு எம்பி பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.