ETV Bharat / state

கருணாநிதி இல்லாத திமுக கட்சி..! ஆட்சி..!: கருணாநிதியின் நீட்சியாக ஸ்டாலின் இருக்கிறாரா? - ஒரு பார்வை! - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக அரை நூற்றாண்டுகள் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இல்லாத திமுக கட்சியும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியும் அதன் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை இது.

கருணாநிதி இருந்து இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா ? அவர் இல்லாத திமுக கட்சி..! ஆட்சி..! ஒரு பார்வை

author img

By

Published : Jun 3, 2022, 4:24 PM IST

Updated : Jun 4, 2022, 2:51 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்து இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா? இது ஆன்மிக அரசு என்று திமுக அமைச்சர் கூறியிருப்பாரா? பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறாகப் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. யாரை எங்கு எப்படி வைப்பது என்று கருணாநிதி நன்கு தெரிந்தவர்.

கருணாநிதிக்கு பேச்சு, மூச்சு, சுவாசம் உணவு, குடிநீர் இப்படி எல்லாமே அரசியல் தான். அவர் ஒரு லெஜன்ட், அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவருடன் ஸ்டாலினை ஒப்பிடுவது என்பது யதார்த்தமாக இருக்காது. முதலமைச்சராக ஸ்டாலின் நிர்வாகத் திறமையோடு செயல்படுகிறார். ஆனால், கருணாநிதி அரசியல் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் காட்டியவர்.

கருணாநிதி இல்லாத திமுக கட்சி..! ஆட்சி..!: கருணாநிதியின் நீட்சியாக ஸ்டாலின் இருக்கிறாரா? - ஒரு பார்வை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக அரை நூற்றாண்டுகள் இருந்த கருணாநிதி இல்லாத அவரது கட்சி மற்றும் திமுக ஆட்சி குறித்து, பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் லெனின் ஆகியோரின் நேர்காணலை இந்தப் பதிவில் காணலாம்.

கருணாநிதி இல்லாத திமுக கட்சி..! ஆட்சி..! : கருணாநிதியின் நீட்சியாக ஸ்டாலின் இருக்கிறாரா ? - ஒரு பார்வை

இதனிடையே, நம்மிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா எப்பொழுதும் மக்களுக்காக நலத்திட்டம் வழங்கும் விழாவாக இருந்தது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற முதல் பிறந்தநாள் அன்று கண் தானம் செய்யும் விழா நடைபெற்றது. இது நாடு முழுவதும் பின்பற்றப்பட்டது.

மறுவாழ்வு கொடுத்தவர்: அதேபோல மற்றொரு பிறந்த நாளன்று, சாலையில் இருந்த பிச்சைக்காரர்கள் எல்லாரையும் பெரிய கட்டடத்துக்குள் அமர்த்தி மறுவாழ்வு கொடுத்தவர். மேலும் மற்றொரு பிறந்தநாளுக்கு அனாதையாக உள்ள குழந்தைகளுக்குக் கருணை இல்லங்கள் அமைத்து விழா கொண்டாடப்பட்டது.

மேலும் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது பிறந்தநாளில் மரக்கன்று நடும் திட்டமானது விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் இது நாடு முழுவதும் பரவ அங்கிருக்கும் தொண்டர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ஆகவே அவருடைய பிறந்த நாள் என்பது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கருணாநிதி
கருணாநிதி

'திராவிட மாடல்' ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆட்சி மக்களுக்காகவும், கட்சி மக்களுக்காகவும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருகிறோம்.

இதனை உருவாக்கியவர் கருணாநிதி: குறிப்பாக, கஜா புயல், வெள்ளம், கரோனா காலங்களில் தலைமைக் கழகத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆட்சியில் இருந்தால் அமைச்சர்கள் மூலமாகவும் ஆட்சியில் இல்லை என்றால் கட்சியின் மூலமாகவும் உதவும் மனப்பான்மை இந்திய அளவில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது, இதனை உருவாக்கியவர் கருணாநிதி.

கருணாநிதி மறைந்ததாகவே எங்களுக்குத் தோன்றவில்லை காரணம் என்னவென்றால் அவர் தற்போதும் எங்களுடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய தோன்றலாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். அவர் உயிரோடு இல்லை என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. அவர் இருக்கும்போது எவ்வாறு கட்சி இருந்ததோ, ஆட்சி செயல்பட்டதோ அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார். உள்ளத்துக்குள் அவருடைய உருவத்தைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கேஎஸ். இளங்கோவன், ’மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு வேகமாக முன்னேறியது. தொழில் வளர்ச்சி, பலவகையிலும் வளர்ந்தன, வேலைவாய்ப்புகள் உருவாகின, கல்வி உயர்கல்வி, பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்கப்பட்டது. பல்வேறு வகையிலும் தமிழர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

சமுதாயத்தில் அனைவரும் சம நிலையில் வாழ உதவியது திமுக: குடிசை மாற்று வாரியம், பெண்களுக்கு சொத்தில் பங்களிப்பு, சம பங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியவை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. எந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினாரோ, எந்த மக்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இருந்தனரோ, அவர்களுக்கான திட்டத்தினை வகுத்து மேம்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

இன்றைய ஆட்சியில் அதை அப்படியே முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்கிறார். நரிக்குறவ இன மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி உள்ளார். சமுதாயத்தில் அனைவரும் சம நிலையில் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் என்று அதைத்தான் சொல்கிறோம். இதனை கருணாநிதி தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

கருணாநிதி
கருணாநிதி

கருணாநிதியின் நீட்சியாக ஸ்டாலின்: அதன் நீட்சியாக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார். மேலும் புறக்கணிக்கப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கான நன்மை செய்யும் திட்டங்களை வகுத்துள்ளார். எனவே, இந்த ஆட்சி என்பது கருணாநிதியின் ஆட்சியின் நீட்சியாக அதிலிருந்து மேலும் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய ஆட்சியாக அமைந்திருக்கிறது.

கருணாநிதி
கருணாநிதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கட்சியின் ஆரம்பகட்ட காலத்தில், மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வேகமாகப் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபோது பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டது. கருணாநிதி காலத்தில் கட்சியைப் பொறுத்தவரை, அன்றைக்கு இருந்த அதே வலிமை, தற்போது அதைவிட கூடுதல் வலிமையோடு திகழ்கிறது.

தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் களத்தில் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும், தற்போது பெற்றுள்ள இந்த வெற்றிகள் எல்லாம் தொண்டர்கள் களத்தில் ஆற்றிய பணியின் காரணமாக, ஸ்டாலினின் திறமையும் சேர்ந்து கிடைக்கப்பெற்றவை. மேலும் அதிக எண்ணிக்கை உள்ள உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக திமுக உள்ளது.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது: குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டும் கோயிலில் அர்ச்சகராக இருப்பது, என் நெஞ்சில் தைக்கும் முள்ளாக இருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் இதனை நீக்க வேண்டும் என தந்தை பெரியார் அன்றைய தினம் கோரிக்கை வைத்திருந்தார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவற்கான நடவடிக்கைதான் இது என்று சொல்லி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆனால், நீதி மன்றத் தலையீட்டால் அப்போது அது தடை செய்யப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் அந்த சட்டத்திற்கான தடை நீக்கப்பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்தது. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நபர்கள் அர்ச்சகர் ஆகப் பணியாற்றி வருகின்றனர்’ என்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கல்லூரி பேராசிரியர் லெனின், "திராவிட இயக்கம் 100 ஆண்டுகள் காலப் பழமை கொண்ட இயக்கம். 70, 80 ஆண்டுகள், தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை கைகளில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 70 ஆண்டுகளில் பல்வேறு நல்ல காரியங்களை செய்து இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கருணாநிதிக்கு முன், பின் கட்சியும், ஆட்சியும்: திராவிட இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி அவருடைய சாதனைகள் அளப்பரியது தான். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால், கருணாநிதிக்கு முன் கட்சியும், ஆட்சியும், கருணாநிதிக்குப் பின் கட்சியும், ஆட்சியும் என்று வரையறை செய்து பார்க்கும்போது, அவ்வாறு ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன்.

திமுகவில் கட்டுக்கோப்பு இருக்கிறதா?: ஏனென்றால் அவர் இருந்த காலத்தில் அரசியல் சூழல் வேறு, இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் அரசியல், கட்சியின் சூழல் என்பது வேறு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போது கட்சி கட்டுக்கோப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது திமுகவில் கட்டுக்கோப்பு இருக்கிறதா? தலைமைக்கு கட்டுப்படுகிற, தலைமைக்கு விசுவாசிக்கின்ற, தன்மை இருக்கிறதா என்றால் அது குறைந்து இருக்கிறது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய திமுகவினர்: இதனை நாம் வெளிப்படையாக பார்க்க முடியும் எப்படி என்றால், நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில், ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள். நேற்று முன்தினம் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக சார்ந்த நபர்கள் வெற்றி பெற்றார்கள் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது என அறிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர்  ஸ்டாலின் மரியாதை
முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

அப்படி என்றால் இது எதைக் காட்டுகிறது என்றால் ஒரு கட்சியின் தலைவர், தானே மனம் நொந்து போய் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்த மாதிரி செயல்களால் கூனிக் குறுகி நிற்கிறேன் என எழுதுகிற அளவுக்கு திமுக தோழர்களின் நடவடிக்கை உள்ளது என்பதை வெளிப்படையாக காணமுடிகிறது. மேலும் மூத்த அமைச்சர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கூட, அதனை கட்சி கண்டிக்கிறது என்ற செய்திகளைக் காண்கிறோம்.

கட்சிக்கு அறிவாளிகள் தேவையில்லை முட்டாள்கள் தேவை: ஒரு கட்சிக்கு எது முக்கியம் என்றால் கோட்பாடு, தத்துவம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்குத் தலைமை, அதையும் கடந்து கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். தந்தை பெரியார், என்னுடைய கட்சிக்கு தலைவர்கள் தேவை இல்லை இன்னும் சொல்லப்போனால் அறிவாளிகள் தேவையில்லை; முட்டாள்கள் தேவை என சொல்லுவார். தலைமை சொன்னால், ராணுவத்தில் கேட்பதைப் போல கட்டுக்கோப்பான ஆட்கள் தேவை என தந்தைப் பெரியார் சொல்லி இருக்கிறார். பெரியாரின் வழித்தோன்றலாகச் சொல்லுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில், இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற சூழ்நிலையில், வெளிப்படையாக உள்ளாட்சித் தேர்தலில் இவ்வாறு நடந்திருக்கிறது.

கருணாநிதியின் கீழ் கட்சியும், ஆட்சியும் இருந்தபோது, இடங்களைப் பகிர்வு செய்யும்போது, மிக லாவகமாகப் பேசி சில இடங்களை முடிவு செய்வார். தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிக்காமல் நடந்துகொண்டார்கள் என வெளிப்படையாகக் கூறும்போது கூட சில பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அதனைக் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் பெருந்தன்மையோடு கடந்துள்ளனர். அதற்குக் காரணம் தற்போதைய நிலைமையில் உள்ள பேராபத்தைக் குறித்து அவர்கள் உணர்ந்து உள்ளார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்றதற்கு முழு முதல் காரணம் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு என்பதை மறந்து விடக்கூடாது, மறுப்பதற்கில்லை. இப்படி இருக்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கூட்டணி கட்சிகளுடன் ஏன் பகிர்ந்து அளிக்கவில்லை. தமிழ்நாடு என்றால் சமூக நீதியின் தலைநகரம், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்கிறார்கள். இங்கு எந்த கோணத்தில் சமூகநீதியை திமுக புரிந்து வைத்துக்கொண்டுள்ளது என கேள்வி எழுகிறது.

இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியா? : வெறும் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியா? எளிய மக்களின் அதிகாரப் பகிர்வுதான் சமூக நீதி. ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் பங்கு இல்லாமல் திமுகவின் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. திமுகவின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாக்குகள் 80, 90 விழுக்காடு வாக்குகள் வந்துள்ளது.

வாக்குவங்கி இல்லாத காங்கிரஸ்: இந்த விழுக்காடு வாக்கு வங்கியில் அமைக்கப்பட்ட ஆட்சியில் அந்த மக்களுக்கான பிரதிநிதித்துவம் கூட்டணி கட்சிகளுக்கு என்ன அளிக்கப்பட்டுள்ளது, மாநிலங்களவைத் தேர்தலில் கூட பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் வாக்குவங்கி இல்லாத காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் ஏற்கெனவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சொற்ப அளவில் தொகுதிகள் கொடுத்ததாக கூட்டணிக் கட்சிகள் குமுறி வருகின்றன.

பாஜக போன்ற பாசிச கட்சிகள் இங்கு வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையில் தொகுதி உடன்படிக்கை மூலம் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் திமுகவால் அபகரிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியிருந்தால் சமூக நீதிக்கான அரசாக இதனைக் கருதலாம்.

பூர்வகுடி மக்களை வெளியேற்றிய திமுக: சென்னை திமுகவின் கோட்டை என்கிறார்கள். ஆனால், இங்குள்ள சேரியில் இருக்கும் பூர்வகுடி மக்களின் வாக்கு வங்கியைப் பொறுத்து திமுகவின் வெற்றி உள்ளது. ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு நடைபெறும் இத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் எவ்வாறு படிப்பார்கள்.

மேலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தும் நிலையில், இத்தகைய பூர்வகுடி மக்களை கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட நகர்களில் நகர்த்துகிறது, சமூகநீதியா என்ற கேள்வி எழுகிறது. இந்த பூர்வகுடி மக்களை வெளியேற்றி, இந்த நாட்டையும் நகரத்தையும் யாருக்கு ஒப்படைக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி பூர்வகுடி மக்களிடம் காணப்படுகிறது.

காவி பயங்கரவாதம் கும்பலுக்கு திமுக அடிபணிகிறதா?: சமூக நீதிக்கான அரசு, திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய திமுக அரசு, பூர்வ குடிகளை வெளியேற்றி வரும் நிலையில், மாடுகள் வளர்ப்பதற்காகப் பசு மடங்களை நிறுவுவது என்ன காரணம். மாட்டை ரோட்டில் விடாமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும். அதற்கான அரசு ஆணையைப் பிறப்பித்து, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு மாநகராட்சி செய்ய வேண்டிய வேலை அது.

இதனை விடுத்து மாநில அரசு 20 கோடி ரூபாயில் பெரிய பசு மடம் காட்டப்படும் என்று சொல்வது சந்தேகத்தைக் கிளப்புகிறது. உள்ளூர பாஜக ஜுரம் அடிக்கிறதோ அல்லது காவி பயங்கரவாதம் கும்பலுக்கு அடிபணிகிறார்களோ என்ற ஒரு சந்தேகப் பார்வை எழ செய்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலங்களை மீட்பது, மோசடிகளைக் கண்டறிவது என்று சொல்வது மிகவும் பாராட்டுக்குரிய செய்தி.

என்ன ஆனது திமுகவின் கொள்கை: ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களை ஏன் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடாது. ’ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண்கிறோம்’ என்று திமுகவின் கொள்கை என்றால் பறிமுதல் செய்யப்பட்ட அநேக இடங்கள் சும்மா தான் இருக்கிறது. அதில் பூர்வ குழுக்களுக்கு பட்டா வழங்கி குடியமர்த்தி இருக்கலாம். ஏறக்குறைய சென்னையின் பாதி பூர்வகுடி மக்களை வெளியேற்றிவிட்டு சமூக நீதிக்கான அரசு என்று சொல்வதோ திராவிட மாடல் அரசு என்று சொல்வதோ ஏற்கத்தக்கதாக இருக்காது.

தடுப்பு நடவடிக்கையினை இந்த அரசு எடுக்கவில்லை: க்யூட் என்ற மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வருகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இதனை மாநில பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வருவதற்கு வெகுநாட்கள் ஆகாது. ஏனென்றால், நீட் தேர்வை இதே போன்று தான் சொன்னார்கள். ஆனால், தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய மருத்துவ கல்லூரிக்கு பொருந்தும் என்று நிலைமை மாறியுள்ளது. அதனால் இத்தகைய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு உத்தரவுகள் வருவதற்கு முன்னதாக தடுப்பு நடவடிக்கையாக சட்டப்பூர்வமான நடைமுறைகளை இந்த அரசு இன்னும் எடுக்கவில்லை. இதனை முதலில் அரசு எடுக்க வேண்டும் ’என வேண்டுகோள் விடுத்தார்.

சனாதன கோட்பாட்டை முறியடிக்க வேண்டும்: திமுகவின் பெருமையாகப் பேசப்படுவது எல்லோருக்கும் கல்வியைக் கொடுத்தார்கள் என்பது தான். எல்லோருக்கும் கல்வி என்பதைச் சட்டமாக்கி எல்லோரும் கல்வி கற்பதற்கு ஆதாரமாக இருந்தது திராவிட அரசு தான். அப்படி இருக்கும்போது அடிப்படை கல்வி உரிமையைப் பறிக்கும் காவி பயங்கரவாதிகளுடைய வர்ணாஸ்ரமம் சனாதன கோட்பாட்டை முறியடிக்கவும், அடித்து நொறுக்க வேண்டும். இதனை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வளவு ஆண்டுகாலம் ஆட்சியில், சமூகநீதி பேசும் திராவிட இயக்கங்களில் கூட 100 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களான எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு பின்னடைவு, அரசுப் பணிகளில் அதிகம் உள்ளது. இதனை நிறைவு செய்து இருந்தாலே பட்டியலின இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பார்கள். இதனையெல்லாம் கவனித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகநீதிக்கான அரசாக ஏற்றுக்கொள்ள இதைச் செய்யுங்கள் : தற்போதும் கூட கிராமங்களில் இரட்டைக் குவளை முறை பிரச்னை, சுடுகாடு பிரச்னை, ஆணவப் படுகொலைகள் நடந்து வருகின்றன. ஆணவப் படுகொலைக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மிக நெடிய நீண்ட கால கோரிக்கை ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சட்டத்தை இயற்றவில்லை. ஆகவே, ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக்கூடிய, சிறப்பு சட்டத்தை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இதையெல்லாம் செய்கிற பொழுது தான் சமூகநீதிக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும்.

ஏதோ ஒரு நாளைக்கு விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வீடுகளில் சென்று சாப்பிடுவது, 4 பேருக்கு பட்டா வழங்குவதினால் அவர்களின் வாழ்க்கை மாறுவது இல்லை. உள்ளபடியே அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு சமூக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு, என்ன திட்டத்தை வைத்திருக்கிறோம் என்ன அதிகார பங்களிப்பைச் செய்து இருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.

கருணாநிதி திருநங்கைகளுக்கு சமூக மாற்றத்திற்காகத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அதனைத் தற்போதும் இந்த அரசு பின்பற்றி வருகிறது. இதேபோல் பழங்குடி இன மக்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பதவி வழங்கலாம். விளிம்பு நிலையில் இருந்து வரும் அமைச்சர்களுக்கும் கூட அதிகார மையத்திற்கான துறை வழங்கப்படுவதில்லை.

கட்சியில் விளிம்பு நிலை மக்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பங்கு இல்லை: கருணாநிதி மறைவிற்குப் பிறகு கட்சியில் விளிம்பு நிலையிலுள்ள நபர்களுக்கு பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோது வழக்கம்போல் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

விளிம்பு நிலை மக்களுக்கு கட்சியிலும் பங்கு இல்லை ஆட்சியிலும் பங்கு இல்லை, அதிகாரத்தில் சமமாகப் பங்கு அளிக்காமல் சமூகநீதி ஆட்சி என்றும் திராவிட மாடல் ஆட்சி என்றும் சொல்வது சரியானது தானா என்பதே அவர்களுடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

திமுகவில் பட்டியல் இன மக்களின் நிலை: மத்தியப் பிரதேசத்திலும், ஆந்திராவிலும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக இரண்டு பட்ஜெட் போடப்படுகிறது. ஆனால் பெரியார் மண் என்று பேசுகின்ற திமுக, இப்பட்டியல் இன மக்களுக்காகச் சிறப்பு உட்கூறு திட்டத்தைச் செயல்படுத்தாமல் உள்ளது.

மேலும் பட்டியல் இனத்தைச் சார்ந்த நபர்களுக்கு திமுகவில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் பாஜகவில் அத்தகைய பெரிய பொறுப்புகள் பட்டியலின நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி, விளிம்புநிலை மக்களுக்காகப் பொறுப்புகள் வழங்கப்படும்போதுதான் சமூகநீதிக்கான அரசாக திமுக மாறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ் என் உயிர் மூச்சு - வையகம் போற்றும் கலைஞரின் பயணம்

Last Updated : Jun 4, 2022, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.