ETV Bharat / state

ஏரிகளில் குறைந்து வரும் நீரின் அளவு - குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை தயாராக உள்ளதா? - கிருஷ்ணா நதி நீரை

சென்னை ஏரிகளில் நீரின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று மாதங்களில் ஏரிகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ஏரிகளில் நீரின் அளவு குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க: சென்னை தயாராக உள்ளதா?

author img

By

Published : Jun 10, 2022, 11:50 AM IST

சென்னை: சென்னையில் கோடைகால வெயிலின் தாக்கம் மற்றும் மெட்ரோ நீர் விநியோகத்தை தொடர்ந்து ஏரிகளில் நீரின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் மூன்று மாதங்களில் ஏரிகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உணர்ந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் ஆந்திர அரசை நாடி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து கடந்த மே 8 ஆம் தேதி முதல் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது கிருஷ்ணா நீரானது வினாடிக்கு 520 கன அடி பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் மற்ற மெட்ரோ எரிகளான- செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீரின் மொத்த கொள்ளளவு 7,785 மில்லியன் கியூபிக் அடியாக (7.8 டி.எம்.சி) அடியாக உள்ளது. எனினும் அடுத்த வடகிழக்கு பருவமழை (நவம்பர்) தொடங்கும் வரை இந்த நீர் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி நிபுணர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

"கடந்த மே 8 முதல் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரை திறந்து விட்டுள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பை வைத்து வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னைவாசிகளுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்யலாம். அடுத்து வரும் மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க ஆந்திர அரசிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கிருஷ்ணா நீரை திறந்து விட கோரிக்கை வைத்தது", என செயற்பொறியாளர் ஒருவர் கூறினார்.

மேலும் வரும் செப்டம்பர் மாதம் வரை கிருஷ்ணா நீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு உறுதி அளித்தள்ளது. தற்போது வரை 1.8 டி.எம்.சி நீர் பூண்டி ஏரிக்கு கிடைத்துள்ளது. மேலும் 1.5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

"ஆந்திர அரசு தெலுங்கு-கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் கிருஷ்ணா நதி நீர் சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது", என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், "சென்னையில் இந்த வருடம் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏரிகள் மற்றும் கடல் நீரை குடிநீர்மயமாகும் நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

"தற்போது கடல்நீர் குடிநீர் திட்டம் மூலம் 200 மில்லியன் லிட்டர் ஒரு நாளைக்கு கிடைக்கிறது. மேலும் 180 மில்லியன் லிட்டர் வீராணம் ஏரியிலிருந்தும், மற்றும் 170 மில்லியன் லிட்டர் மெட்ரோ ஏரிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்கிறோம்", என கூறிய அவர் ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நீரும் உதவியாக உள்ளது என தெரிவித்தார்.

எனவே சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என தெரிவித்தார்.சென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 550 மில்லியன் லிட்டர் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நஞ்சாகும் யமுனா நதி - தலைநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.