சென்னையில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மோற்கொள்கின்றன. சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்களில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஆட்சிப் பணியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள வி.ஆர். பிள்ளைத் தெருவை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அந்தப் பகுதியில் மக்களுக்கு தேவையான பொருள்கள் கிடைக்கிறதா? மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? கரோனா தடுப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!