சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 10 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு (செப்.23) உத்தரவிட்டுள்ளது.
திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை காவல்துறை பயிற்சி மைய கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிதாக கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் ஆயுதப்படை ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரத்தோட் சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார். டிஐஜி சரவண சுந்தர் திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜியாக இருந்த ராதிகா, சென்னை டிஐஜியாக (பொது நிர்வாகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விடுப்பில் இருந்த எஸ்.பி நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக இருந்த மாடசாமி சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த வேதரத்தினம் விரிவாக்க பிரிவு எஸ்.பியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்பிக்களாக திமுக வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்வு