ETV Bharat / state

ஜெகத்ரட்சகன் மருமகனிடம் விசாரணை.. வருமான வரித்துறையின் 5வது நாள் கெடுபிடி.. - today news in tamil

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவரது மருமகனை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

investigation-continues-for-5th-day-at-places-related-to-dmk-mp-jagathrakshakan
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக தொடரும் சோதனை...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:37 PM IST

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு,அவருக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மற்றும் மதுபான ஆலை, கார்ப்ரேட் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவிதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 40 இடங்களிலும் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சுமார் 90 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் ஒரு சில இடங்களில் சோதனையை முடித்துள்ளனர்.

இந்த நிலையில் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்திலிருந்து சுமார் நான்கு கோடி ரூபாயும் சவிதா மருத்துவ குழுவத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து 12 கோடி ரூபாயை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜெகத்ரட்சகனின் மகள் ஜீவிதா மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன் நடத்தி வரும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து எம்பி ஜெகத்ரட்சகன் மகள் ஜீவிதா மற்றும் மருமகன் நாராயண சாமி இளமாறனை ஜெகத்ரட்கனின் அடையார் இல்லத்திற்கு வரவைக்கப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று இரவு முதல் அவரின் மருமகனிடம் நவிசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நாராயணசாமி இளவரன் மட்டும் எலைட் மானியம, சிமெண்ட் உட்பட சுமார் 12 நிறுவனங்களை நடத்தி வருகிறார் இதில் அவரது மனைவி ஜீவிதாவும் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்கீடு செய்து அவரிடம் விசாரணை நடத்தியும் வரும் நிலையில் தற்போது அவரது மருமகன் இளமாறனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுமார் ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையானது இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சந்தேகம் ஏதாவது இருந்தால் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சினை? திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.