ETV Bharat / state

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு அறிமுகம்! - இன்றைய பட்ஜெட் தாக்கல்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

author img

By

Published : Feb 23, 2021, 10:30 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன் விவரங்கள்;

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் முக்கியம்சங்கள்:

  • கோவிட்19 பெருந்தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு 13352 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • அம்மா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு.
  • நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு

    காவல் துறை:
  • 9 ஆயிரத்து 567.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    நீதித் துறை நிர்வாகம்:
  • 1437.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • நீதித்துறை நிர்வாகம் துறையில் புதிய நீதிமன்றக் கட்டடங்களை கட்டுவதற்காக 289.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    வேளாண்மை துறை:
  • வேளாண் துறைக்கு 11982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    மீன்வளத்துறை:
  • மீன்வளத்துறை 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக் கான மூலதன செலவினங்கள் 580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலை துறைக்காக 6023.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு 2470.93 கோடி ஒதுக்கீடு.
  • மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ஒதுக்கீடு
  • உயர்கல்வித் துறைக்காக மொத்தம் 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு -செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு 1224.26 கோடி ஒதுக்கீடு.
  • பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகததிற்கு 2,350 கோடி ரூபாய்ஒதுக்கீடு.
  • அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சித் துறைக்காக 22618.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நீர்வள ஆதார துறைக்கு 6 ஆயிரத்து 453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மதிய சத்துணவு திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 43 ஆயிரத்து 246 பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1953.98 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கரோனா தொற்று காரணமாக, சுகாதாரம் மற்றும் நிவாரணம் தொடர்பான பணிகளுக்கு 12,917.85 கோடி ரூபாய் வருவாய் கணக்கில் கூடுதல் செலவினம்.
  • கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்காக முதற்கட்டமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 688 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தகவல்:
  • அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பர் மாதத்தில் முடிவடையும்.
  • 565 கோடி ரூபாய் செலவில் *மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடி நிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் பணிகள் விரைவில் முடிவடையும்*

    பள்ளி கல்வித் துறை:
  • பள்ளி கல்விக்காக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறையில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும்.
  • கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்கப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்கள் கீழ் 2011 - 12 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 12 லட்சத்து 50 ஆயிரத்து 705 பயனாளிகளுக்கு 1791 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,099 கிலோ தங்கமும் 4,371 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
  • அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில், 2 ஆயிரம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 1580 கோடி ரூபாய் செலவில் 2200 BS - VI பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களில் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் 5171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன், கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். நெல் ஜெயராமன் மையம் 47.87 லட்சம் ரூபாய் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

தேசிய பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஹார்டுவேர் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தை போன்றே, கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்காக வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக ரைட்ஸ் என்ற சிறப்புத் திட்டம் 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுக்கப்பட்டு வருகிறது.

கடன் மதிப்பீடு:

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை ஒட்டுமொத்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாய். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலையில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 180 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்:

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடிய 30 லட்சம் ரூபாயாகவும், வருவாய் செலவுகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 694 கோடியே 69 லட்சம் ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரவுக்கும், செலவுக்கும் ஆன பற்றாக்குறை 65,994.06 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் செலவினங்களை குறைத்து அதன் காரணமாக 13 ஆயிரத்து 250 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும், பெரும் தொற்று காரணமாக நிவாரண பணிகளுக்கு 2917 புள்ளி 85 கோடி ரூபாய் வருவாய் கணக்கில் கூடுதலாக செலவினம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டை முழுவதுமாக புறக்கணிக்கிறது திமுக - துரைமுருகன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.