சென்னை: தொழில் துறையினருக்கு செயற்கை நுண்ணறிவில் (எம்.டெக்) ஆன்லைன் படிப்பினை 18 மாதங்கள் நடத்துவதற்கு சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இந்தப் படிப்பு 18 மாதங்கள் ஆன்லைன் மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் நபர்களுக்கு செயற்கை நூண்ணறிவு குறித்து (தொழிசாலைக்கு தேவையான) பாடம் நடத்தப்பட உள்ளது.
சென்னை ஐஐடி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இணைந்து தொழில்துறை செயற்கை நுண்ணறிவு குறித்து ஆன்லைன் மூலம் பயனர் சார்ந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் நேரடி கற்பித்தல் முறையில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வருவார்கள்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, "இந்தத் திட்டம், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நூண்ணறிவு தொடர்பான முக்கியமான தலைப்புகளை உள்ளடக்கிய வலுவான தத்துவார்த்த படிப்புகள் மற்றும் ஆய்வகங்களைக் கொண்டிருக்கும். தரவு அறிவியல் வழிமுறைகள், நேரத் தொடர் பகுப்பாய்வு, பன்முக தரவு பகுப்பாய்வு, இயந்திர கற்றல், வலுவூட்டல் கற்றல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அடிப்படை கணித நுட்பங்களில் உள்ள கருத்துகளை கோட்பாட்டுப் படிப்புகள் உள்ளடக்கும்.
தொழில்துறை சிக்கல்களுக்கான செயற்கை நூண்ணறிவுத் தீர்வுகள், செயல்பாடுகள் குறித்து விவரிக்கும். இந்தப் படிப்புகள் வலுவான கோட்பாட்டு அடித்தளத்தையும், பாடத்திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு திறன்களை வளர்க்கவும் பயன்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரடியின் ஆட்டம் காளையிடம் செல்லாது.. பிஎஸ்இ 600 புள்ளிகள் உயர்வு!