சென்னை சோழவரம் அருகே போதைப்பொருள் கடத்தப்பட்டதாக தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த ராயப்பா ராஜ் ஆண்டனி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இந்திய அரசு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ராயப்பா ராஜ் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து தகவலறிந்து ஹைதரபாத்தில் இருந்து சென்னை வந்த ராயப்பா ராஜின் குடும்பத்தினர், கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசின. அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்காக விஷாகப்பட்டினத்திற்குச் சென்ற நிலையில் இரவு வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினர்.
அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் தொலைப்பேசி தொடர்பு வரவில்லை எனவும் 21ஆம் தேதி இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் 19ஆம் தேதி தன்னை கைது செய்ததாகவும், அவரை பொன்னேரியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதால் தன்னிடம் உள்ள பொருள்களை வந்து பெற்று செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய ராயப்பா ராஜின் மனைவி, தன்னுடைய கணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை கிடையாது எனவும் தெரிவிக்கின்றனர். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டால் அவரது உடலை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் விசாரணை கைதி 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை