சென்னையில் சர்வதேச இளைஞர் திருவிழா நிகழ்ச்சி செப்டம்பர் ஒன்றாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 15 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்சியின் இறுதிநாள் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள் விருது வழங்கினர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 15 நாட்களாக சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர்கள் அனைவரும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றார்.