சென்னை: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நயோக்யா தொழில்நுட்பக் கழகம் (NITech) உலக பொறியாளர்களுக்கான சர்வதேச பட்டாதரி திட்டம் 2021 (International Graduate Program for Global Engineers 2021) என்ற முதுகலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மையம் (The Centre for International Relations) நேற்று (நவம்பர் 16) வெளியிட்டது.
இதில், ஜப்பானின் என்ஐடெக் (NITech) கல்வி நிறுவனம், இரண்டு ஆண்டுகள் கொண்ட பொறியியல் முதுகலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. உலக நாடுகளில் இருந்து பொறியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஆர்வமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்பை முடித்த பின்பு ஐப்பான் நாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களில், மாணவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். திறமையான பொறியாளர்களை உருவாக்கும் நோக்கிலும், தயாரிப்பு நிறுவனங்களில் திறமையுடன் செயல்படும் விதத்திலும், மாணவர்கள் சிறப்பு திட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாத கல்வியாண்டிற்காக, விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். மேலும், இதுகுறித்த தகவல்களைப்பெற https://www.nitech.ac.jp/eng/admission/igpge.html. என்ற இணையதள முகவரியை அணுகலாம். அல்லது மிட்ஸுகோ அன்டூ (Mitsuko ANDO) @ international@adm.nitech.ac.jp. தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வில் தகுதி பெற்றும் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள்!