ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை! - Tamil Nadu Anti Bribery Department

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை!

author img

By

Published : Dec 15, 2022, 8:55 PM IST

சென்னை: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதப் பண பரிமாற்றம் தொடர்பாக 2020ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

வருமானத்திற்கு அதிகமாக அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 மதிப்புள்ள சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. ஆகையால், சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மறு உத்தரவு வரும்வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தங்க கோப்பை போட்டி நடத்த நிதி: உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.