ETV Bharat / state

'மாமனிதன்' படத்திற்கான தடை நீங்கியது! - maamanithan film distribution rights

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

actor Vijay sethupathi’
actor Vijay sethupathi’
author img

By

Published : Dec 14, 2020, 4:20 PM IST

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' என்ற படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்தி நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மெகாமால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், "மாமனிதன்" திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியுள்ளதால், தங்களுக்கு விநியோக உரிமை தராமல் படத்தை வெளியிடக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன், "மாமனிதன்" படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அபிராமி மெகாமால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.