ETV Bharat / state

பெற்றோர் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம்; காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்! - காதல் ஜோடி

பெற்றோர் எதிர்ப்பால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

police station  inter caste married  inter caste married couple  chennai inter caste marriage  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சாதி மறுப்பு திருமணம்  சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிகள்  காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி  காதல் ஜோடி  காதல்
சாதி மறுப்பு திருமணம்
author img

By

Published : Oct 25, 2021, 11:04 AM IST

சென்னை: போரூர் காரம்பாக்கம் பகுதியில் முடித்திருத்தகம் செய்யும் கடை வைத்து நடத்தி வருபவர் ஆனந்த (29). அதே பகுதியில் உள்ள பார்மஸி ஒன்றில் பணியாற்றி வருபவர் தரணி (23). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தாண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் பலமுறை ஆனந்த் பெண்வீட்டாரிடம் பேசியும், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேரி கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து திருமணம் செய்த கையோடு எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் பெண்ணின் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பு குறித்து காவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.