ETV Bharat / state

பெண் கல்விக்கு எதிரான கருத்தை விதைக்கும் எண்ணம் நிறைவேறாது: முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 23, 2023, 3:45 PM IST

பெண் கல்விக்கு எதிரான பழமைவாத கருத்துகளை விதைக்கும் எண்ணம், ஒருபோதும் நிறைவேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண் கல்வி முதலமைச்சர்
பெண் கல்வி முதலமைச்சர்

சென்னை: தியாகராயநகரில் உள்ள வித்யோதயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட அவர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய அவர், "பிற விழாக்களில் பங்கேற்பதை விட, பள்ளி நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போது அதிகமான உற்சாகத்தைப்பெறுவது உண்டு. கள்ளம், கபடம் இல்லாத பள்ளிக்குழந்தைகளின் முகத்தை காண்பதில் இருக்கக்கூடிய உற்சாகத்தைப் பார்க்கும்போது அதை விட, வேறு மகிழ்ச்சி இருந்துவிட முடியாது.

கல்லூரியை காணாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எத்தனையோ கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார். நவீன தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு சிற்பியாக விளங்கியவர் அவர். பெண்களைப் படிக்க வெளியில் அனுப்பக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில், பெண்களுக்காக தனியாக பள்ளியைத் தொடங்கி பெறும் புரட்சியின் அடையாளத்தை உருவாக்கியது, வித்யோதயா பள்ளி.

அந்த பழமைவாதக் கருத்துகளை மீண்டும் சமூகத்தில் விதைக்க சிலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்க வேண்டும், போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அதை திரும்பப் பறிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுடைய பிழைப்பு வாத கருத்துகளை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு மாணவிகள் நன்றாகப் படிக்க வேண்டும். கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. அதை நீங்கள் அடையக்கூடாது என்று திட்டம் போடுபவர்களுடைய எண்ணம் ஒரு போதும் நிறைவேறக் கூடாது.

கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளிடம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்திவிடாமல், கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: "கட்சியில் மதிப்பு இல்லை" ராஜாஜி கொள்ளுப் பேரன் காங்கிரசில் இருந்து விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.