ETV Bharat / state

மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - election preparations across the state

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலையும் நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரமடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Apr 4, 2021, 4:18 PM IST

Updated : Apr 4, 2021, 6:11 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக, வரும் 6ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 234 தொகுதிகளில், 3,585 ஆண்களும், 411 பெண்களும் , 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 3,998 பேர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி நிலவி வரினும் அதிமுக, திமுக கூட்டணிகளே முதன்மையானதாக பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் நடந்து வந்த பரப்புரைகள் இன்று மாலை 7 மணியளவில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் ஆறாம் தேதி காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

இதற்காக தேர்தல் ஆணையம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது. அவற்றில் 551 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும், 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுலாக துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும் மத்திய அரசின் பணியில் உள்ள ஒருவர் வாக்குச்சாவடியில் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவதுடன், வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அங்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிக்கான வசதிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Last Updated : Apr 4, 2021, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.