துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக தந்தை பெரியார் விடுதலைக் கழகத்தினர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவரது வீட்டுக்குத் தொடர்ச்சியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து, இன்று நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'